சின்னத்திரை நடிகர் செந்தில்- நடிகை ஸ்ரீஜாவுக்கு ஆண் குழந்தை!

சின்னத்திரை நடிகர் செந்தில்- நடிகை ஸ்ரீஜாவுக்கு ஆண் குழந்தை!

சின்னத்திரை நடிகர் செந்தில்- ஸ்ரீஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இணை. இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் முதல் சீசன் கடந்த 2011-ல் ஆரம்பித்து 2013 வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்த போதே காதலித்த இருவரும் 2014-ல் ரீல் ஜோடியில் இருந்து ரியல் ஜோடியாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி எட்டு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் செந்தில், ஸ்ரீஜா இருவரும் தாங்கள் பெற்றோர் ஆன செய்தியை வளைகாப்பு புகைப்படங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது இருவருக்கும் மகன் பிறந்துள்ளது. இந்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கக்கூடிய செந்தில், ‘எங்கள் மகனால் நாங்கள் பெற்றோராக பிறந்துள்ளோம். உங்கள் அனைவரது அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீஜாவின் சொந்த மாநிலமான கேரளாவில் குழந்தை பிறந்துள்ளதாகவும், இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் செந்தில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in