`கல்யாண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்'- திருமண நிச்சயம் செய்த ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் குஷி

`கல்யாண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்'- திருமண நிச்சயம் செய்த ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் குஷி

நடிகர், விஜே, ஆர்.ஜே என பன்முகம் கொண்ட 'ப்ளாக்‌ஷீப்' புகழ் விக்னேஷ்காந்துக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகர், விஜே, ஆர்.ஜே என பன்முகம் கொண்டவர் விக்னேஷ்காந்த். விஜே ஆசையில் மீடியா துறைக்கு முயற்சி செய்தவருக்கு கல்லூரி காலத்தில் அவரது தோற்றம் காரணமாக ஆர்.ஜே. வாய்ப்பு மட்டுமே முதலில் கிடைக்க அதில் இருந்து படிப்படியாக முன்னேறி தற்போது நண்பர்களுடன் ப்ளாக்‌ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட யூடியூப் சேனல்கள், பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம் என மீடியாவில் பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்.

இது மட்டுமல்லாமல், 'சென்னை 600028', 'நட்பே துணை', 'மீசையை முறுக்கு' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பாடல்களும் எழுதியுள்ளார். இப்போது ஆர்.ஜே. விக்னேஷ்காந்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து, 'மிகவும் எளிமையான முறையில் எங்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு நிச்சயம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வரும். கல்யாண தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என மகிழ்ச்சியுடன் இதனை தெரிவித்துள்ளார்.

ப்ளாக்‌ஷீப்' நண்பர்கள், நடிகர் ரியோ குடும்பம் என ஆர்.ஜே. விக்னேஷ்காந்தின் நெருங்கிய வட்டம் மட்டுமே இதில் பங்கேற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.