’ராஜா ராணி’ சீரியலில் இருந்து விலகிய ரியா- என்ன காரணம்?

’ராஜா ராணி’
’ராஜா ராணி’சீரியல்...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலில் இருந்து நடிகை ரியா திடிரென விலகி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஹிட்டான ‘ராஜா ராணி’ சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வந்தார். இடையில் அவர் கர்ப்பமானதால் தொடரை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக ரியா நடித்து வந்தார், இப்போது அவரும் ‘ராஜா ராணி’ சீரியலை விட்டு விலகி இருக்கிறார்.

இதுகுறித்து, அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ ’ராஜா ராணி2’ சீரியலுக்குள் சந்தியாவாக நடிக்க வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்த சீரியல் குறித்து நான் பெரிதாக பேசியது இல்லை. ஆனாலும், இந்த வருடம் முழுக்க சந்தியாவாக நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த அன்பும் ஆதரவும் பெரியது. சில தனிப்பட்ட காரணங்களால் நான் இந்த சீரியலில் தொடரப் போவதில்லை. இனிமேல் புது சந்தியாவுடன் பயணிப்பீர்கள். எனக்குக் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் அவருக்கும் கொடுங்கள்’ என கூறியிருக்கிறார்.

இவருக்குப் பதிலாக சந்தியா கதாபாத்திரத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் நடித்திருந்த ஆஷா கெடா நடிக்கவிருக்கிறார். அவருக்கான புது புரோமோவும் தற்போது வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in