மீண்டும் ஜீ தமிழுக்குத் திரும்பும் ரேஷ்மா!

மீண்டும் ஜீ தமிழுக்குத் திரும்பும் ரேஷ்மா!

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சூடவா’ சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. இவருக்கும் அந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்த மதனுக்கும் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மலர்ந்தது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இப்போது இந்த ஜோடி, ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகும் ‘அபி டெய்லர்ஸ்’ என்ற சீரியலில் இணைந்து நடித்து வருகிறது. இதற்கிடையே, அந்த சேனலுக்கும் ரேஷ்மாவுக்கும் இடையே மனக்கசப்பு எனத் தகவல்கள் வெளியாகின. எனினும், இது குறித்து ரேஷ்மா தரப்பு இன்னும் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில், தற்போது ரேஷ்மா தன்னைப் பிரபலப்படுத்திய ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே மீண்டும் வருகிறார். ‘பூ பூச்சூடவா’ இயக்குநர், தயாரிப்பாளர் என கிட்டத்தட்ட அதே டீம் தான் இந்தப் புது சீரியலிலும் களமிறங்குகிறது. இதில்தான் நாயகியாக ரேஷ்மா ஒப்பந்தமாகி உள்ளார். என்ன கதைக்களம், எப்போது இருந்து சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற விவரங்கள் எல்லாம் விரைவில் தொலைக்காட்சி தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறது. இதில் ரேஷ்மாவுக்கு ஜோடியாக அவரது கணவர் மதனே நடிக்க இருக்கிறாரா அல்லது அவரது ரீல் ஹிட் ஜோடியான தினேஷ் நடிக்கிறாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Related Stories

No stories found.