நம் மனதில் நீங்காத இடம் பிடித்தது: மறுஒளிபரப்பு செய்யப்படும் `ஹிட்' சீரியல்கள்!

நம் மனதில் நீங்காத இடம் பிடித்தது: மறுஒளிபரப்பு செய்யப்படும் `ஹிட்' சீரியல்கள்!

தொண்ணூறுகளில் ஒளிபரப்பாகி வெற்றி அடைந்த ‘கோலங்கள்’, ‘தென்றல்’ ஆகிய சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தொண்ணூறுகளின் காலக்கட்டத்தில் வீட்டில் உள்ள பலருக்கும் வார நாட்களில் பொழுது போக்கு என்றால் அது சீரியல்கள் தான். அதிலும் குறிப்பாக பொதிகை, சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும்பாலும் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. அந்த வகையில் குடும்ப பெண்கள், அவர்களின் போராட்டம் என மையப்படுத்திய கதையாக சன் தொலைக்காட்சியில் வந்த சீரியல்கள் தான் ‘கோலங்கள்’ மற்றும் ‘தென்றல்’.

சமீபத்தில் ‘மெட்டி ஒலி’ சீரியல் மறுஒளிபரப்பு செய்யப்பட்ட போது கூட ரசிகர்கள் விரும்பி பார்த்தனர். அந்த வகையில் முன்பு ஹிட் அடித்த க்ளாஸிக் சீரியல்களுக்கு இப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறது. நடிகை தேவையாணி அபி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 2003-2009 காலக்கட்டத்திலும், நடிகை ஸ்ருதி துளசி என்ற கதாப்பாத்திரத்தில் 2009-2015 காலக்கட்டத்தில் ‘தென்றல்’ சீரியலும் கிட்டத்தட்ட 1200 எபிசோட்களை கடந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று ஒளிபரப்பானது.

இப்போது இந்த சீரியல்களை மறுஒளிபரப்பு செய்யும் உரிமையை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. ‘கோலங்கள்’ சீரியல் வரும் 16-ம் தேதி முதல் மதியம் ஒரு மணிக்கும், ‘தென்றல்’ சீரியல் 2 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.

`நம் மனதில் நீங்காமல் இடம் பிடித்த நம் மனதுக்கு பிடித்த சீரியல் மீண்டும் வந்து விட்டது’ என இந்த செய்தியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளது. இந்த சேனலில் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.