மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய ராதிகா!

மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய   ராதிகா!

கலைஞர் தொலைக்காட்சியில் ’பொன்னி C/o ராணி’ என்ற சீரியலை தயாரித்து இரட்டை கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடிக்கிறார்.

’சித்தி’, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘வாணி ராணி’ என நடிகை ராதிகா சின்னத்திரையில் நடித்த பல சீரியல்களுக்கு இன்றளவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. கரோனா ஊரடங்கு நேரத்தில் தொலைக்காட்சியில் ’சித்தி’ சீரியல் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு ‘சித்தி 2’ சீரியலை ஆரம்பித்து ராதிகாவே தயாரித்தார். ஆனால், இந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே அதில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அத்துடன் இனி படங்கள், அரசியலில் அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் சீரியல் பக்கம் திரும்பி இருக்கிறார்.

ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த சீரியல் ‘வாணி ராணி’. 2013-ல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் சன் டிவியில் ஒளிபரப்பானது. இப்போது அதே போன்ற சீரியல் மூலம் தான் ராதிகா திரும்ப வருகிறார்.

’பொன்னி C/o ராணி’ என அந்த சீரியலுக்குப் பெயரிடப்பட்டு அதற்கான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக கலைஞர் தொலைக்காட்சி சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. இந்த தொடர் 'வாணி ராணி’ சீரியலின் மறுஒளிபரப்பா அல்லது அதே கதையின் இரண்டாம் பாகமா, ஜூன் மாதத்தில் எப்போது இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.