‘இதுதான் வாழ்க்கை!’ - பாவ்னியின் பதிவு சொல்வது என்ன?

‘இதுதான் வாழ்க்கை!’ - பாவ்னியின் பதிவு சொல்வது என்ன?

விஜய் டிவியின் ‘ரெட்டைவால் குருவி', 'சின்னத்தம்பி' ஆகிய சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தவர் பாவ்னி ரெட்டி. சில படங்களில் நடித்த பாவ்னி, பிறகு சிறிது காலம் சின்னத்திரை, சினிமா இரண்டையும் விட்டு விலகியே இருந்தார். இந்த நிலையில், கடந்த பிக் பாஸ் ஐந்தாவது சீஸனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

அதில் தன்னுடைய சினிமா சீரியல் வாய்ப்புகள், தனக்குத் திருமணமானது, கணவர் எதிர்பாராத விதமாக இறந்தது, குடும்பத்தின் ஆதரவு என பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த சீஸனில் அமீருக்கும் பாவ்னிக்கு இடையில் நல்ல நட்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனிலும் இந்த ஜோடி இப்போது பங்கேற்றுவருகிறது.

ரம்யா கிருஷ்ணன், நடன இயக்குநர் சதீஷ் நடுவர்களாகப் பங்கேற்கும் இதன் முதல் எபிசோட் நேற்று ஒளிபரப்பானது. இதில் நடனமாடியது பற்றி பாவ்னி பகிர்ந்துள்ளார்.

‘அனைவருடைய ஆதரவுக்கும் என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி. இது முற்றிலும் புதிதான ஒரு விஷயம். அனைவரும் என் கடின உழைப்பைப் பாராட்டுவீர்கள் என நம்புகிறேன். நடனம் எப்போதுமே எனக்குச் சவாலான ஒரு விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. அதனால், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் என்னை நேசிப்பவர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக இதில் 100 சதவீத உழைப்பைக் கொடுக்க விரும்புகிறேன்.

சிலர் இதைப் பாராட்டலாம்; பலர் இதில் நான் பெரிதாக ஒன்றும் இல்லை என ட்ரோல் செய்யலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு கமென்ட்டும் எனக்கு முக்கியமானது. ஏனெனில் அது ஒன்றுதான் என்னை இன்னும் அதிகம் வேலை பார்க்க வைக்கிறது. என்னுடைய தயாரிப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் நடன மாஸ்டர் அமீருக்கும் சிறப்பு நன்றி. என்னுடைய மாஸ்டர் அமீர் சொன்னதுபோல நான் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அதற்கு முடிவே கிடையாது. இதுதான் வாழ்க்கையும்கூட!’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் பாவ்னி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in