‘பாண்டியன் ஸ்டோர்ஸ்2’ சீரியல் வரும் அக்டோபர் 30ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இரண்டாவது சீசனில் நடிக்காமல் போனது ஏன் என நடிகர் குமரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதன் இரண்டாம் பாகம் இந்த மாதம் 30ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான புரோமோக்களை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களில் ஸ்டாலின் மட்டுமே நடிக்கிறார். மற்றவர்கள் எல்லாருமே மாற்றப்பட்டுள்ளனர்.
முதல் பாகத்தில் அண்ணன்- தம்பி கதையை மையமாகக் கொண்டு நகர இரண்டாம் பாகத்தின் கதையோ அப்பா- மகன் கதையை கொண்டு நகர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலின் ஜோடியாக நிரோஷா நடிக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்த மூன்று வருடங்களும் கதிர் கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளேன். கதிராக இருப்பதை கண்டிப்பாக இனி வரும் காலங்களில் மிஸ் செய்வேன்.
இத்தனை நாளும் எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. இனிமேலும் இது தொடரும் என நம்புகிறேன். இனி அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியாது. ஆனால், இந்த கம்ஃபோர்ட் ஜோனில் மீண்டும் தொடர விரும்பவில்லை. இதில் இருந்து வெளியேற விரும்புகிறேன். சினிமாவில் புதிய வாய்ப்புகளைப் பெற்று நடிக்க விரும்புகிறேன். இது கடினமான முடிவு என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இதை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்’ எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!