4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வருகிறார் நிஷா!

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வருகிறார் நிஷா!

சின்னத்திரை நடிகை நிஷா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார்.

சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளருமான நிஷாவுக்கு கடந்த 2015-ல் நடிகர் கணேஷூடன் காதல் திருமணம் நடைபெற்றது. பிறகு திருமணம் ஆன மூன்றாவது வருடம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் கடந்த 2018-ம் வருடம் நடிப்புக்கு சிறிய பிரேக் கொடுத்தவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'செம்பருத்தி' சீரியலில் கீதா சுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்து, 'கீதா சுப்ரமணியத்தை சந்தியுங்கள். இதற்கான தகவல்களை சீக்கிரம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

'கனா காணும் காலங்கள்'- கல்லூரி காலம் சீரியலில் திவ்யா கதாபாத்திரத்தில் நிஷா பிரபலமானார். பின்பு 'தெய்வமகள்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வந்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் வலம் வந்தார். கடந்த 2018-ல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது குழந்தைக்கு தாயானதால் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகினார் நிஷா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in