மெகா சீரியல் கதாசிரியர்: குஷ்பூவின் புதிய அவதாரம்!

மெகா சீரியல் கதாசிரியர்: குஷ்பூவின் புதிய அவதாரம்!
’மீரா’ குஷ்பூ

நடிகை குஷ்பூ நடிப்பில் புதிதாக வெளியாக உள்ள தொலைக்காட்சித் தொடருக்கு அவரே கதை எழுதுவதன் மூலம், கதாசிரியராகவும் அவதாரமெடுக்கிறார்.

பன்முகத் திறமை கொண்ட குஷ்பூ, சிறுவயதிலேயே நடிகையாக தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். 90களின் கனவுக் கன்னியரில் தனியிடம் பிடித்தவர். குஷ்பூவுக்கு கோவில் என்பது தமிழ் திரைநாயகியர் வரலாற்றில் இடம் பெற்ற ஒன்று. கணவர் சுந்தர்.சி உடன் இணைந்து திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

திரையுலகுக்கு அப்பால் நேரடி அரசியலிலும் குஷ்பூ தீவிரமாக பங்கேற்று வருகிறார். எந்தக் கட்சியில் இருந்தாலும், பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெரிய திரையைத் தொடர்ந்து சின்னத் திரையிலும் கால் பதித்தார். பல்வேறு சேனல்களில் வெளியாகும் ஏரளமான மெகா தொடர்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்தார். சில தொடர்களை தயாரித்தும் உள்ளார். ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்ட இதர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வந்ததிலும் தனி முத்திரை பதித்தார்.

இந்த வரிசையில் தற்போது கதாசிரியராகவும் குஷ்பூ பொறுப்பேற்கிறார். கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியாகும் புதிய மெகா தொடரை தயாரித்து அதன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவும் உள்ளார். கூடவே மெகா தொடரின் கதையையும் அவரே எழுதுகிறார். மீரா என்ற தலைப்பிலான புதிய மெகா தொடர் விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.