'கனா காணும் காலங்கள்': ரீ என்ட்ரி கொடுத்த இர்ஃபான்!

'கனா காணும் காலங்கள்': ரீ என்ட்ரி கொடுத்த இர்ஃபான்!

'கனா காணும் காலங்கள்' சீரியலில் தற்போது இர்ஃபான் என்ட்ரி கொடுக்கும் புரோமோ வந்துள்ளது.

தொலைக்காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற 'கனா காணும் காலங்கள்' தொடரின் புது சீசன் கடந்த மாத இறுதியில் இருந்து டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006ம் ஆண்டு 'கனா காணும் காலங்கள்' என்ற புதிய தொடர் ஒளிபரப்பட்டது. பள்ளி கால மாணவர்களின் நட்பு, அவர்களின் குறும்பு, சேட்டைகள், காதல், சண்டை, ஆசிரியர் மாணவர் உறவு என தொடர் ஒளிபரப்பான சமயம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது வரை பல 90'ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ஒரு தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

பள்ளி காலங்களை காட்சிப்படுத்திய 'கனா காணும் காலங்கள்' அடுத்து கல்லூரி காலத்தையும் தொடராக்கியது. பள்ளி காலத்தில் நடித்தவர்களோடு இன்னும் சில புதுமுகங்கள் இணைய அந்த 'கனா காணும் காலங்கள்' - கல்லூரியின் கதை சீசனும் ரசிகர்களிடையே மறக்க முடியாத நினைவுகளை கொடுத்திருக்கிறது.

இதனை அடுத்து இப்போது பல வருடங்களுக்கு பிறகு இந்த தொடரின் அடுத்த சீசனை விஜய் தொலைக்காட்சி தற்போது ஓடிடியில் ஒளிபரப்பு செய்து வருகிறது. ஓடிடி பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக இது தொடராக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலின் முதல் சீசன் அதாவது பள்ளி காலத்தில் மாணவராக நடித்து புகழ் பெற்றவர் இர்ஃபான். அவர் மீண்டும் தற்போதைய புது சீசனில் ஆசிரியராக எண்ட்ரி கொடுக்கிறார். இதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பள்ளி தற்போது இருக்கும் நிலைமைக்கு யாரும் ஆசிரியராக வரவில்லை என அந்த பள்ளி ஆசிரியர் ராஜேஷ் கவலையாக பேசி கொண்டிருக்க இயற்பியல் ஆசிரியராக வருவதற்கு ஜெரின் தயாராக இருக்கிறான் எனவும் சொல்கிறார். அந்த ஜெரின் என்ற கதாப்பாத்திரத்தில் தான் இர்ஃபான் ஆசிரியராக நடிக்க இருக்கிறார். ஒவ்வொரு வாரம் வெள்ளி அன்று புது எபிசோட் வரும் அதில் இந்த வாரம் இர்ஃபான் எபிசோட் வர இருக்கிறது.

'கனா காணும் காலங்கள்' சீரியலுக்கு பிறகு 'சரவணன் மீனாட்சி' மற்றும் சில படங்களிலும் நடித்தார் இர்ஃபான். சினிமாவில் முழு மூச்சாக நடிக்க 'சரவணன் மீனாட்சி' சீரியலை விட்டு பாதியில் விலகினார். ஆனால் சினிமாவில் சரியானபடிக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்', 'குக் வித் கோமாளி' ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் வாய்ப்புகள் வந்தும் மறுத்தவர் இப்போது மீண்டும் தனக்கு புகழ் வெளிச்சம் கொடுத்த அதே 'கனா காணும் காலங்கள்' தொடரில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in