‘தாய்மை எனும் வரம்’ - மகிழ்ச்சியில் திளைக்கும் மதுமிதா!

‘தாய்மை எனும் வரம்’ - மகிழ்ச்சியில் திளைக்கும் மதுமிதா!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ‘ஜாங்கிரி மதுமிதா’வாகப் பிரபலமானவர் மதுமிதா. இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ‘கலக்கப்போவது யாரு?', 'லொள்ளு சபா' உள்ளிட்டவற்றில் பங்கேற்றிருக்கிறார். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரிலும் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அவர் நடித்த ஜாங்கிரி கதாபாத்திரம்தான் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது!

அதன் பின்னர், ‘அட்டக்கத்தி', 'ராஜா ராணி', 'விஸ்வாசம்', 'டிக்கிலோனா', 'அனபெல் சேதுபதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராகவும் பங்குபெற்றார். ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகக் கையைக் கத்தியால் காயப்படுத்திக்கொண்டு அவர் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுமிதா பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் நுழைவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவருக்கும் அவரது உறவினரான ஜோயலுக்கும் திருமணம் நடந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி தரப்பு சம்பள பாக்கியைத் தரவில்லை என மதுமிதாவும் அவரது கணவரும் பரபரப்பு பேட்டி கொடுத்தார்கள். மேலும் தம்பதியினர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்ற தகவலும் வந்தது.

இப்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியிட்டிருக்கிறார் மதுமிதா. படங்கள், நகைச்சுவை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தவர் சிறிது காலம் பிரேக் எடுத்தார். இதற்குக் காரணம் குழந்தைதான் என்ற விஷயத்தை இப்போது பதிவுசெய்திருக்கும் மதுமிதா, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தான் மேக்கப் போடும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

இதையடுத்து, மதுமிதா - ஜோயல் தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.