'பாரதி கண்ணம்மா' சீசன்2 வருகிறதா?

பாரதி கண்ணம்மா சீரியலில்...
பாரதி கண்ணம்மா சீரியலில்...பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசன் வருகிறதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் 'பாரதி கண்ணம்மா' சீரியலும் ஒன்று. ஆரம்பத்தில் இந்த சீரியல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பின்னர் கதைக்களத்திற்காக சமூகவலைதளங்களில் அதிகம் கேலியும் செய்யப்பட்டது. இந்த நிலையில், 'பாரதி கண்ணம்மா' இருவரின் திருமண வைபோகத்துடன் இந்த சீரியல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பாரதி கண்ணம்மா திருமணத்தில் ஆர்.ஜே. பாலாஜி, பிக் பாஸ் ஷிவின், நடிகை கன்னிகா உள்ளிட்டப் பலர் கலந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் சமூகவலைதளங்களிலும், சீரியல் முடிந்து விட்டதாக இதன் நடிகர்களும் எமோஷனலான பதிவுகளையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரியலின் இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் 'மகாநதி' என்ற சீரியல் அடுத்து புதிதாக ஒளிபரப்பாக இருக்கிறது. இது 'பாரதி கண்ணம்மா'-வின் இரண்டாம் பாகமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அது தனி சீரியல் என சொல்லப்படது.

இப்போது, 'பாரதி கண்ணம்மா' இரண்டாவது சீசன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் அந்த கதைக்களம் ஹேமா, லட்சுமி என குழந்தைகளை மையப்படுத்தி நகரும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in