‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆர்யன்?

சின்னத்திரை நடிகர் ஆர்யன்- நடிகை ஷபானா
சின்னத்திரை நடிகர் ஆர்யன்- நடிகை ஷபானா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து ஆர்யன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை சீரியல்களில் நடிகர்கள் மாறுவது என்பது வழக்கமாக நடக்ககூடிய ஒன்றுதான். இவருக்கு பதில் இனி இவர் என சமீபத்தில் சின்னத்திரையில் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் தற்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் இணைந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் ஒன்று. சீரியல் ஒளிபரப்பான ஆரம்ப நாட்களில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சீரியல், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு காரணமாக தொலைக்காட்சியின் ப்ரைம் டைமான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஆர்யன்
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஆர்யன்

குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்ட இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்து வருகிறார். நடிகராக இவருக்கு இந்த சீரியல் தான் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தை அவ்வளவாக கவனத்தில் கொள்ளாத தன்னுடைய நலனே முக்கியம் என்று இருக்கும் மூத்த பையனின் கதாப்பாத்திரம் ஆர்யனுடையது.

இந்த சீரியல் மூலமாக இவருக்கு நல்ல புகழ் வெளிச்சம் கிடைத்தது. சமீபத்தில் இவருக்கும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலின் கதாநாயகி ஷபானாவுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. தற்போது ‘செம்பருத்தி’ சீரியல் கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருப்பதும், ஆர்யன் ‘பாக்கியலட்சுமி’ சீரியலை விட்டு விலக முடிவு செய்திருப்பதும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஆர்யனுக்கான காட்சிகள் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கும். இதனால், சீரியலில் இருந்து விலக முடிவெடுத்து தனக்கு நடிக்க அதிக வாய்ப்புள்ள வேறு சீரியலில் நடிக்க போகிறாரா அல்லது ஷபானாவும், ஆர்யனும் இணைந்து புது சீரியல்களில் நடிக்க இருக்கின்றனரா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இது குறித்து ஆர்யனிடம் இருந்தோ அல்லது சீரியல் குழுவிடம் இருந்தோ உறுதியான தகவல்கள் விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம். மேலும், ஆர்யன் விலகுவது உறுதி என்றால் அவரது கதாப்பாத்திரத்திற்கு யார் வர போகிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in