‘குக் வித் கோமாளி’யிலிருந்து வெளியேற்றப்படுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை! - கிரேஸ் கருணாஸ்

‘குக் வித் கோமாளி’யிலிருந்து வெளியேற்றப்படுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை! - கிரேஸ் கருணாஸ்

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட கிரேஸ் கருணாஸ், “இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

தனியார் சேனலின் பிரபல ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஷிவாங்கி, சுனிதா, மணிமேகலை என வழக்கமான கோமாளிகளுடன் பரத், அதிர்ச்சி அருண் போன்றவர்களும் புது கோமாளிகளாக உள்ளனர். போட்டியாளர்களாக ரோஷினி, அம்மு அபிராமி, வித்யுலேகா உள்ளிட்டோர் உள்ளனர்.

பாடகர் அந்தோணிதாசன், ராகுல் தாத்தா, சார்பட்டா சந்தோஷ், சுட்டி அரவிந்த் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றைய எபிசோட்டில் இருந்து பின்னணி பாடகி கிரேஸ் கருணாஸ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

தன்னுடைய வெளியேற்றம் குறித்து கிரேஸ் உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ’குக் வித் கோமாளி’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அழகான பயணத்தில் இந்த நாள் நான் எதிர்பாராத ஒன்று. நான் வெளியேற்றப்படுவேன் என எதிர்ப்பார்க்கவே இல்லை. ஆனால், இந்த நாளில் நீங்கள் அனைவரும் என் மீது காட்டிய அன்பும் வாழ்த்துகளும் நிஜமாகவே என்னால் நம்ப முடியாத அளவில் இருக்கிறது. சமையல் என்பது எப்போதுமே எனக்கு பிடித்தமான ஒன்று. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை எனது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். ஆனால், இது என்னுடைய நாள் அல்ல. நிச்சயமாக இதை விட உறுதியாக நான் வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் வருவேன். இப்போது போலவே எப்போதும் உங்கள் ஆதரவை கொடுங்கள். நிச்சயம் என் சமையல் மூலமாக உங்களை மகிழ்விப்பேன்’ என்று கூறியுள்ளார்.

நேற்றைய எபிசோட்டில் கிரேஸுக்கும் வித்யுலேகாவுக்கும் இடையிலான போட்டியில் வித்யுலேகா வெற்றி பெற்றார். கிரேஸ் வெளியேற்றம் குறித்து வித்யுலேகா தன்னுடைய பதிவில், ‘இன்றைய ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மிகவும் கடினமான ஒன்றாக எனக்கு அமைந்துவிட்டது. என்னுடைய நெருங்கிய தோழியான கிரேஸ் கருணாஸுக்கு எதிராகவே போட்டியிட வேண்டியதாக இருந்தது. அது என்னுடைய மோசமான கனவும் கூட. இருந்தாலும் எனக்கு ஆதரவாக பேசிய அனைவருக்கும் நன்றி’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நிகழ்சியில் இருந்து கிரேஸ் கருணாஸை மிஸ் செய்கிறோம் என நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும் ரசிகர்களும் கமென்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in