சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி-3 தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக் பாஸ் சீசன்-6ல் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில், தந்தை மறைந்துவிட்டதாக வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா. அந்தத் தொடருக்குப் பின் 'சரவணன் மீனாட்சி' முதலான பல சீரியல்களில் நடித்தார். 'சரவணன் மீனாட்சி' இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. பிக் பாஸ் சீசன் 6 ல் இவர் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.
'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் உடன் நடித்த நடிகர் தினேஷைக் காதலித்துத் திருமணமும் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதி கடந்த சில வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.சட்டப்படி இவர்களுக்கு விவாகரத்து ஆகாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தினேஷ் மீது ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் தந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்த ரச்சிதாவின் தந்தை இன்று காலை பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் காலமானார். அப்பாவின் உடல் நலன் சரியில்லாததால் ரச்சிதா ஏற்கெனவே தந்தையை உடனிருந்து கவனித்து வந்தார். அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!