
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றியதற்கு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் நடிகர் பிரதீப் அத்துமீறி பேசுகிறார், அவர் நிகழ்ச்சியில் இருப்பது பாதுகாப்பு இல்லை போன்ற காரணங்களைச் சொல்லி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், அந்த ரெட் கார்டுடன் பிரதீப் தன் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களும் வைரலாகியது.
பிக் பாஸ் ரசிகர்கள் பலர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் இன்னும் சிலர் பிரதீப் ஒரு வலுவான போட்டியாளர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். இதில் பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் உண்டு. அதில் நடிகரும் பிரதீப்பின் நண்பருமான கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உங்களைத் தெரிந்தவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.
பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான நிரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதீப்பை வெளியேற்றி இருப்பது சரியானது அல்ல. இதன்மூலம் நிகழ்ச்சி பார்க்கும் சுவாரஸ்யத்தை இழக்க வைக்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.
’பிக் பாஸ் வீட்டைச்சுற்றி 24*7 என கேமராக்களும் ஸ்டாஃப் மெம்பரும் இருக்கும்போது இந்த கூடிற்குள் எப்படி பிரதீப்பால் பாதுகாப்பு இல்லாமல் போகும்? இதுமுறையற்ற எவிக்ஷன். நான் பிரதீப்புக்கு ஆதரவு கொடுக்கிறேன். அவர் தரப்பையும் கேட்க ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார் சனம் ஷெட்டி.
கவிஞர் சிநேகன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீ பார்க்காத ரணங்களும் இல்லை. நீ பார்க்காத வலிகளும் இல்லை பிரதீப். இதுவும் கடந்துபோகும். வாழ்க்கை எந்த வீட்டுக்குள்ளும் இல்லை.... வெளியே கிடக்கு வா!’ என ஆறுதல் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்