‘எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்’ - ரசிகருக்கு ரித்திகா சொன்ன பதில்!

‘எல்லாம் தலைவிதிப்படி நடக்கும்’ - ரசிகருக்கு ரித்திகா சொன்ன பதில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. கேளிக்கை அம்சங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் புகழ் ரித்திகா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தார்.

சிறிது காலமே அவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றாலும் அவரும் பாலாவும் வைத்து நிறைய கலகலப்பான எபிசோடுகள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவே இருந்தன. இப்போது ‘பாக்கியலட்சுமி’ சீரியல், பிற சிறப்பு நிகழ்ச்சிகள், தன்னுடைய யூடியூப் சேனல் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்திவருகிறார் ரித்திகா.

இந்நிலையில், தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் ஒருவர், ‘நீங்கள் எப்போது ‘குக் வித் கோமாளி சீஸன் 3-ல் மீண்டும் வருவீர்கள்?’ என கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு ரித்திகா, ‘உங்களைப் போலவே நானும் சீஸன் 3-ல் வர நானும் ஆர்வமாக உள்ளேன். பொதுவாக, சீஸனின் இறுதியில்தான் இது போன்று முந்தைய சீஸன் போட்டியாளர்களை ரீஎன்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை செலிபிரேஷன் மோடுக்கு எடுத்துச் செல்வார்கள். அதனால், நிகழ்ச்சி இறுதியில் வரும் என நினைக்கிறேன். வரும்போது நிச்சயம் தெரிவிக்கிறேன்’ என பதிலளித்திருக்கிறார்.

இன்னொரு ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ரித்திகா, ‘எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும்’ என பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.