`குக் வித் கோமாளி3'-ல் டபுள் எவிக்‌ஷன்?

`குக் வித் கோமாளி3'-ல் டபுள் எவிக்‌ஷன்?

'குக் வித் கோமாளி3'-ல் முதல் முறையாக டபுள் எவிக்‌ஷன் என எச்சரித்து இருக்கிறார் செஃப் வெங்கடேஷ் பட்.

விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பின்னணி பாடகர் அந்தோணிதாசன், நடிகர் மனோபாலா, ராகுல் தாதா, 'சார்பட்டா' புகழ் சந்தோஷ் என நான்கு பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

இது தவிர்த்து இரண்டு வாரத்திற்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக சுட்டி அரவிந்த் மற்றும் 'சார்பட்டா' பட வில்லன் முத்துக்குமார் ஆகிய 2 பேர் வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வார எபிசோடில் போட்டியாளர்கள் நன்றாக சமைக்கவில்லை இம்யூனிட்டி வெற்றி பெறவில்லை என்ற காரணத்தால் எவிக்‌ஷன் இல்லை. ஆனால், அடுத்த வாரம் நிச்சயம் இரண்டு பேர் வெளியேற்றம் அதாவது டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என செஃப் வெங்கடேஷ் பட் எச்சரித்துள்ளார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி சுற்றில் ரோஷினி, தர்ஷன், க்ரேஸ் கருணாஸ் என எந்த போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது நன்றாக சமைத்து வருகிறீர்கள். ஆனால், இம்யூனிட்டி வெற்றி பெறாத காரணத்தால் இந்த வாரம் எவிக்‌ஷன் யாரும் இல்லை. இதனால் அடுத்த வாரம் நிச்சயம் வெளியேற்றம் இருக்கும். இதில் எந்த பாரபட்சமும் இருக்காது என செஃப் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.

'குக் வித் கோமாளி' சீசன்3-ல் முதல்முறையாக டபுள் எவிக்‌ஷன் என்று செஃப் எச்சரித்துள்ளது போட்டியாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் இன்னும் நன்றாக சமைக்க வேண்டும் என முனைப்பை போட்டியாளர்கள் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.