நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

பிக் பாஸ்7 வீட்டில் மீண்டும் டபுள் எவிக்‌ஷன்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து மீண்டும் இரண்டு நபர்கள் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்ற டேக் லைனிற்கு ஏற்ப இந்த சீசன் பிக் பாஸ் தமிழில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. முதலில் பிக் பாஸ் இல்லத்தை இரண்டாக மாற்றினார்கள். அடுத்து முதல் முறையாக இந்த சீசனிலேயே ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே டபுள் எவிக்‌ஷன், ரெட் கார்டு கொடுத்து போட்டியாளர்கள் வெளியேற்றம் என பல விஷயங்கள் நடந்தது. அந்த வகையில், பெண்கள் பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்பு பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர்கள் மத்தியில் இதை வைத்தே சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது.

வினுஷா குறித்து நிக்சன் சொன்ன கமென்ட்
வினுஷா குறித்து நிக்சன் சொன்ன கமென்ட்

ஐஷூவிடம் தவறாக நடந்து கொள்கிறான், பெண்களை பாடி ஷேம் செய்கிறான் என நிக்சன் மீது பல குற்றச்சாட்டுகளை பார்வையாளர்கள் வைத்தார்கள். இப்போது இதை பிக் பாஸூம் குறும்படம் போட்டுக் காட்டியுள்ளார். இதனால், நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பார்வையாளர்கள் சொல்லி வரும் நிலையில், மீண்டும் டபுள் எவிக்‌ஷன் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி
கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி

நிகழ்ச்சியில் பிரதீப்பை கமல் சரியாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும் நிக்சன் விவகாரம் குறித்தும் கமல் இந்த வாரம் பேசுவார் என எதிர்பார்க்கலாம்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in