’குக் வித் கோமாளி’ பிரபலம் விஜே மணிமேகலை காலில் கட்டுடன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தொலைக்காட்சி தொகுப்பாளினியும், ‘குக் வித் கோமாளி’ பிரபலமான மணிமேகலை தவறுதலாக வழுக்கி விழுந்ததில் காலில் பலமாக அடிபட்டுள்ளதாக மிகப்பெரிய கட்டுடன் சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’கீழே விழுந்துள்ளதால் காலில் அடிபட்டுள்ளது. எழுந்திருக்கக்கூட முடியவில்லை. எனர்ஜி குறைவாக உள்ளது’ என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் மணிமேகலை.
மணிமேகலை விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். மணிமேலை தற்போது நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, சொந்த ஊரில் கட்டிவரும் பண்ணை வீட்டு வேலைகள் என பிஸியாக உள்ளார்.