`குக் வித் கோமாளி’- புதிதாக நுழைந்த இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி!

`குக் வித் கோமாளி’- புதிதாக நுழைந்த இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி!

`குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சந்தோஷ் எலிமினேஷனுக்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரியாக தற்போது இரண்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள்.

சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற `குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. கொஞ்சம் சமையல் நிறைய காமெடி என்ற கலகல கான்செப்ட் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மூன்று சீசன்களில் சிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, ஷரத், பாலா என்ற வழக்கமான கோமாளிகளும் இந்த சீசனில் கலந்து கொண்டனர். மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக அந்தோணி தாசன், வித்யுலேகா, ரோஷினி, அம்மு அபிராமி, மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை அந்தோணி தாசன், ராகுல் தாத்தா, மனோபாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதில் கடந்த வாரம் ‘சார்பட்டா’ பட புகழ் சந்தோஷ் வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது தனக்கு வருத்தமாக இருந்தாலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் எனவும் குக்கிங் தனது தொழில் இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சிக்காக மிக சிறப்பாக தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ததாக சந்தோஷ் எலிமினேஷனுக்கு பிறகான வீடியோவில் இந்த விஷயங்களை பதிவு செய்திருந்தார்.

கடந்த வாரம் சந்தோஷ் வெளியேறியதை அடுத்து தற்போது இரண்டு புதிய நபர்கள் ‘குக் வித் கோமாளி- சீசன்3’ நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே வந்திருக்கிறார்கள். ‘சார்பட்டா’ படத்தில் வில்லனாக பரவலாக அறியப்பட்ட நடிகர் முத்துக்குமார் மற்றும் ப்ளாக்‌ஷீப் புகழ் ‘சுட்டி’ அரவிந்த் ஆகியோர்தான் அந்த இருவர்.

இருவருமே இது போன்ற சமையல் நிகழ்ச்சிக்கு புதிது என்பதால் இந்த நிகழ்ச்சியில் எப்படி இருக்க போகிறார்கள், சமையல் + காமெடி என்பதை சமாளிப்பார்களா இறுதி வரை நிகழ்ச்சியில் வந்து வெற்றி பெறுவார்களா என்பதை எல்லாம் இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in