'குக் வித் கோமாளி': இறுதிச் சுற்றுக்கு முதலில் தேர்வானது யார்?

'குக் வித் கோமாளி': இறுதிச் சுற்றுக்கு முதலில் தேர்வானது யார்?

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரத்து எபிசோடில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

விஜய் டிவியின் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' மூன்றாவது சீசன் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு சீசன்களில் பங்கேற்ற கோமாளிகள் பெரும்பாலும் இந்த சீசன்களில் இடம்பெற்றிருக்க, பின்னணி பாடகர்கள் அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், நடிகை வித்யூலேகா உள்ளிட்டவர்களும் களத்துக்கு வந்தார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து கிரேஸ் கருணாஸ் வெளியேற்றப்பட, இந்த வாரம் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அதற்கான போட்டியாக நேற்றைய எபிசோடு நடந்தது.

அம்மு அபிராமி, ரோஷினி, வித்யூலேகா, ஸ்ருதிகா, தர்ஷன் உள்ளிட்ட ஆறு பேர் போட்டியின் இறுதிக் கட்டத்தில் இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை, சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்திருந்தனர்.

இதில், ஸ்ருதிகாவும் வித்யுலேகாவும் தங்களது கணவர்களை அழைத்து வந்திருந்தனர். கோமாளி குரேஷி ஷ்ருதிகாவைப் போல நடித்து நிகழ்ச்சியில் கலகலப்பை கூட்டினார். இம்முறை வித்யூலேகாவும் பாலாவும் இணைந்தனர். இதில் வித்யூலேகா அணி இம்யூனிட்டி வெற்றிபெற்று, தங்களது எதிரணியான தர்ஷன் அணியை 5 நிமிடம் சமைக்க விடாமல் நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடில் தர்ஷன், வித்யுலேகா, ஷ்ருதிகா மூவரும் இம்யூனிட்டி சேலஞ்ச் சுற்றுக்குத் தேர்வானார்கள்.

இதனையடுத்து, இந்த இம்யூனிட்டி பேண்ட்டை முதலில் வெல்பவர்கள் தான் இறுதிச் சுற்றுக்கு முதலில் தேர்வாகும் நபர் என்பதை தொகுப்பாளர் ரக்‌ஷன் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டிக்கு அடுத்து சமையல் அடிப்படையில், செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் சேர்ந்து இம்யூனிட்டி பேண்ட்டை முதலில் பெற்ற நபராக ஷ்ருதிகாவை அறிவித்தனர். இதன் மூலம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் டாப் 5-ல் முதலில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான நபராக ஷ்ருதிகா இருக்கிறார்.

இவரைத் தவிர்த்து, அடுத்து இறுதிச் சுற்றுக்கு யார் போக இருக்கிறார்கள் என்பதை இனி வரும் எபிசோட்டுகளில் பார்க்கலாம். இதனிடையே, தர்ஷன், முத்துக்குமார், வித்யுலேகா இவர்களும் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவர்கள் என ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in