`குக் வித் கோமாளி3'- இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் சுட்டி அரவிந்த்!

`குக் வித் கோமாளி3'- இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் சுட்டி அரவிந்த்!
சுட்டி அரவிந்த்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சுட்டி அரவிந்த் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போலவே இந்த சீசனிலும் மணிமேகலை, சுனிதா, புகழ் ஆகியோருடன் அதிர்ச்சி அருண், சரத் ஆகியோர் புது கோமாளிகளாக உள்ளனர்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக 'பாரதி கண்ணம்மா' புகழ் ரோஷினி, அம்மு அபிராமி, 'சார்பட்டா' புகழ் சந்தோஷ், பாடகர் அந்தோணிதாசன், மனோபாலா ஆகியோர் இருக்கின்றனர். இதில் பாடகர் அந்தோணிதாசன், ராகுல் தாத்தா, மனோபாலா, புகழ், சந்தோஷ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரமே எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது, செஃப் வெங்கடேஷ் பட், 'கடந்த மூன்று வாரங்களாக எலிமினேஷன் இல்லாததால் அடுத்த வாரம் நிச்சயம் டபுள் எலிமினேஷன் இருக்கும்' என தெரிவித்து இருந்தார்.

ஆனால், இந்த வார எபிசோட் தொடங்கும் போதே ஒரு எலிமினேஷன் நிச்சயம் என்று கூறினார். இந்த வாரம் தர்ஷன் - அதிர்ச்சி அருண், அம்மு அபிராமி- பாலா மற்றும் கிரேஸ் - பரத், சுனிதா- ஸ்ருதிகா ஆகிய கூட்டணி நடுவர்களிடம் இருந்து பாராட்டு பெற்றது. 'சார்பட்டா' முத்துக்குமார் மற்றும் வித்யுலேகா இருவரும் இம்யூனிட்டி ரெட் பேண்ட் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் தான், ரோஷினி பிரியா மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோரிடையே எலிமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கான போட்டி நிகழ்ந்தது. இதில் தான் சுட்டி அரவிந்த் வெளியேற்றப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அவர் அடுத்த வைல்ட் கார்ட் சுற்று அல்லது இறுதி போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in