‘இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள் மாமா’- வடிவேல் பாலாஜி குறித்து `புகழ்' நெகிழ்ச்சி!

‘இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள் மாமா’- வடிவேல் பாலாஜி குறித்து `புகழ்' நெகிழ்ச்சி!

மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளான இன்று அவர் குறித்தான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார் புகழ்.

மறைந்த பல குரல் கலைஞரும், நகைச்சுவை நடிகருமான வடிவேல் பாலாஜியின் பிறந்தநாள் இன்று. விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்க போவது யாரு’, ‘அது இது எது’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் இவர் பிரபலமானார். நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகர் என்பதால் அவரை போலவே தன் தோற்றத்தை மாற்றி கொண்டதோடு தன் பெயரின் முன்னாலும் வடிவேலு பெயரை சேர்த்து கொண்டார்.

மதுரையை சேர்ந்த வடிவேல் பாலாஜி, ‘முனி’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். இவரது எதிர்பாராத இறப்பு ரசிகர்களிடையேயும் சின்னத்திரை வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்காக அவருடன் பயணித்த ‘குக் வித் கோமாளி’ புகழ் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், "மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா. மிஸ் யூ மாமா’ என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in