பிக் பாஸ்7: காதல் ஜோடிகளுக்குள் சண்டை... ரவீனா மீது கோபப்பட்ட மணி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி, ரவீனா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணி, ரவீனா

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் ரவீனா மீது மணி கடுப்பாகியுள்ள புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் ரவீனா மீது மணி கோபப்படுகிறார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக பூர்ணிமா தேர்வாகியுள்ளார். அவரை குறைவாக கவர்ந்தப் போட்டியாளர்களைத் தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், பிரதீப், நிக்ஸன், மணி, யுகேந்திரன், அனன்யா, ஜோவிகா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிகுழு 24வது நாளிற்கான முதலாவது புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், கோல்ட் ஸ்டார் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரின் வீடியோ காட்டப்படுகிறது. அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு லைக் அல்லது டிஸ்லைக் கொடுக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் மணிக்கு ரவீனா டிஸ்லைக் வழங்கியுள்ளார். இதனால் ரவீனா மீது மணி கடுப்பாகி, 'மனசாட்சியோட நடந்துக்கோ' எனப் பேசுகிறார். ஏற்கெனவே மணி- ரவீனா இடையில் காதல் என கிசுகிசுக்கப்படும் நிலையில் இவர்களுக்குள்ளான சண்டையை ரசிகர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in