
அக்கா என்று சொல்லிவிட்டு நிக்சன் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா பேட்டி ஒன்றில் கொந்தளித்துள்ளார்.
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக இருந்ததால் டபுள் எலிமினேஷன் இருந்தது. அதன்படி, ‘பாரதி கண்ணம்மா’ புகழ் வினுஷா மற்றும் பாடகர் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனை அடுத்து வினுஷா வெளியே வந்ததும் நிக்சன் தன்னைப் பற்றி தவறாக பேசியுள்ளதற்கு எப்போதுமே அவரை மன்னிக்கவே மாட்டேன் என கோபமாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் இருந்தபோது நிக்சன் வினுஷாவை உடல்கேலி செய்யும் வகையில் ஐஷூவுடன் படுக்கையில் படுத்துக் கொண்டு பேசி இருக்கிறார். இதுகுறித்து நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நிக்சனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. பாடி ஷேமிங் செய்யும் அருவருப்பான மனநிலை இது’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள வினுஷா, ‘பிக் பாஸ் வீட்டில் என்னை கொடுமைப்படுத்தினார்கள். பிரதீப்பை கூட மன்னித்து விடுவேன். ஆனால், அக்கா என சொல்லிக் கொண்டே நிக்சன் என்னை பாடி ஷேமிங் செய்து அசிங்கப்படுத்தியுள்ளான். அவனை மன்னிக்கவே மாட்டேன்’ என ஆவேசமாகப் பேசியுள்ளார்.