
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
பிக் பாஸ்7 நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அப்போதிருந்து பிரதீப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் நிறைய பேர் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களே பிரதீப்புக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு இவரது வெளியேற்றம் முறையில்லாதது எனக் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பிரதீப்பை விட நிக்சனால்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை போன்ற கருத்துகளைக் கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்க சொல்கின்றனர் போட்டியாளர்கள்.
தகாத வார்த்தைகளைப் பேசுவது, அக்கா என்று சொல்லிக் கொண்டே பெண்களைப் பாடி ஷேமிங் செய்வது, ஐஷூவுடன் காதல் என்ற பெயரில் சில்மிஷம் செய்வது என இந்த சீசனில் நிக்சன் அதிக வெறுப்புகளை சம்பாதித்து வருகிறார்.
நிக்சனின் இந்த தகாத காரியத்தை எல்லாம் அக்கு வேர் ஆணி வேராக பிரித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பிரதீப்புக்கு பதிலாக நிக்சனுக்குதான் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும் எனப் பகிர்ந்து வருகின்றனர் பிக் பாஸ் பார்வையாளர்கள்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்