அனன்யாவை தொடர்ந்து திடீரென வெளியேறிய பவா செல்லதுரை... பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு!

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை

பிக் பாஸ் இல்லத்தில் இருந்து பவா செல்லதுரை வெளியேறியதால் பிக் பாஸ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.

பிக் பாஸ் தமிழின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை, டாஸ்க் என பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அனன்யா ராவ் முதலாவதாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அனன்யா ராவ்
அனன்யா ராவ்

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டியும் பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டி என்பதையும் தாண்டி வன்மம் அதிகம் இருப்பதாகவும் கூறி எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை வெளியேறினார்.

அவர் முன்பே வெளியேறும் முடிவை எடுத்திருந்தால் கூட அனன்யா எலிமினேட் ஆகாமல் காப்பாற்றப்பட்டிருப்பார் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். இப்போது பிக் பாஸ் இல்லத்தில் 18 போட்டியாளர்களில் இரண்டு பேர் குறைந்து 16 பேர் இருக்கின்றனர். இதனால், இந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லை என பிக் பாஸ் குழு முடிவெடுத்துள்ளது. இதற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!

வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!

ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!

உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in