
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்பின் காதலியை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் தனது யூடியூப் சேனலில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்7 தமிழ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளார். இது கடுமையான விவாதத்தை பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெளியே சென்ற பிரதீப் ஆண்டனி, தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், இனிமேல் தான் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே செல்லப் போவது இல்லை எனவும் தனக்கு பேச ஒரு வாய்ப்புக் கூட கொடுக்கவில்லை எனவும் தீர விசாரிப்பதே மெய் எனவும் கமல்ஹாசனை மறைமுகமாகத் திட்டியும் இருந்தார்.
இயக்குநராக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து வெற்றிப் பெற வேண்டும் என நினைத்தார் பிரதீப். ஆனால், இவர் பாதியிலேயே வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவருக்கு விஜய் டிவி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் இயக்கவும் வாய்ப்புக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அவரின் கேர்ள் ஃபிரண்டை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தி தனது யூடியூப் சேனலில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!