பிக் பாஸ் வீட்டுக்குள் விதிமீறிய ஐஷூ-மாயா: வலுக்கும் கண்டனங்கள்!

மாயா, ஐஷூ
மாயா, ஐஷூ

மாயா, ஐஷூவுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கெனவே எதிர்ப்பு அதிகமாகி வரும் நிலையில் அவர்கள் விதி மீறி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பார்வையாளர்கள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ கேங்க்தான் என ரசிகர்களும், பிக் பாஸ் போட்டியாளர்களும் விவாதித்து வருகின்றனர்.

உள்ளே இருக்கும் நிக்சன் போட்டியாளர்களிடம் அத்துமீறி நடப்பது, மாயா சதிவேலை செய்வது, மாயா மீது ஏற்கெனவே எழுந்த பாலியல் புகார் போன்றவை காரணமாக இவர்களுக்கு முதலில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில், மாயா மைக்கை கழற்றி வைத்துவிட்டு ஐஷூவை பாத்ரூமிற்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்றுக்கு பார்வையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் இல்லத்திற்குள் மைக்கில் கேட்கக் கூடாது என்பதற்காக மாயா கேங்கில் இருப்பவர்கள் தொடர்ந்து மைக்கை தூரமாக வைத்து பேசுவதை தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், மாயாவும் ஐஷுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் செல்லும் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

விதியை மீறி அவர்கள் செயல்படுவதற்கு தற்போது கண்டனங்கள் எழுந்திருக்கிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in