கமல்ஹாசனையே பஞ்சாயத்துக்கு இழுக்கும் மாயா... இந்த வாரம் தரமான சம்பவம் உறுதி!

பிக் பாஸ் மாயா
பிக் பாஸ் மாயா

பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா, மாயா கேங்குக்கு எதிராக வெளியில் பார்வையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் கமல்ஹாசனைப் பற்றியே மாயா பேசியுள்ளது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ ஆகியோர் ஒன்று சேர்ந்து பிக் பாஸ் முன் வைத்தனர். இதனால், பிரதீப்புக்கு கடந்த வாரம் கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இது பிக் பாஸ் இல்லத்திலும், வெளியே பார்வையாளர்கள் மத்தியிலும் கடும் கோபத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

வெளியே இணையத்தில் பலரும் கமல்ஹாசன் இப்படி விசாரிக்காமல் வெளியேற்றிவிட்டார் எனவும் மீண்டும் பிரதீப்பை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் எனவும் சொல்லி வந்தனர்.

இன்னொரு பக்கம் மாயாதான் இது அனைத்திற்கும் காரணம் எனவும் பார்வையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் மாயாவின் கேப்டன்சி ஒரு தலைபட்சமாக இருந்ததாகவும் சொல்லி வருகின்றனர். இதனை மாயா, ஐஷூவுடன் விவாதிக்கும்படியான வீடியோ கிளிப் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 'டூத் பிரஷை ஏன் ஒளித்து வைத்தாய், ஏன் ஒரு தலைபட்சமாக இருந்தாய் என கமல்ஹாசன் என்னை கேள்விக் கேட்டுத் திட்டினால் மன்னிப்பு கேட்டு விடுவேன். அவ்வளவுதான்' என அலட்சியமாக பேசி வருகிறார். இந்த வீடியோவைப் பகிரும் ரசிகர்கள் பலரும் கமல்ஹாசனையே மாயா அலட்சியப்படுத்துகிறார் எனக் கூறி கமென்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in