அஜித்தை சந்தித்த அமீர்- பாவ்னி!

அஜித்தை சந்தித்த அமீர்- பாவ்னி!

பிக்பாஸ் ஜோடிகளான அமீர்- பாவ்னி நடிகர் அஜித்தை சந்தித்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் சின்னத்திரை நடிகை பாவ்னி மற்றும் நடன இயக்குநர் அமீர் இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இருவரும் டைட்டில் வென்ற பிறகு, தாங்கள் இருவரும் காதலில் இருப்பதையும் தெரிவித்தனர்.

இவர்களது இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தற்போது சினிமாவிலும் இருவரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது அமீர்- பாவ்னி இருவரும் நடிகர் அஜித்தை சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்களை இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

‘நான் என்ன என்று சொல்ல, எப்படி சொல்ல, நான் சொன்னால் யார் நம்புவார்கள். என்ன நடந்தது என்பதை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்ன ஒரு அற்புதமான மனிதர்’ என்று மிக மகிழ்ச்சியாக இந்த புகைப்படங்களை அமீர்- பாவ்னி இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ஏற்கனவே, அமீர்- பாவ்னி இருவரும் ‘துணிவு’ படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்தப் புகைப்படங்கள் அவற்றை உறுதி செய்திருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ‘மாஸ்டர்’ புகழ் சிபி சந்திரனும் இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களை பகிர்ந்து ‘பாங்காங்க்கில் நடைபெறும் ‘துணிவு’ படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமாருடன்’ என மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். தற்போது ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாங்காங்க்கில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in