அடேங்கப்பா... பிக் பாஸில் தினேஷூக்கு ஒருநாளைக்கு இவ்வளவு சம்பளமா?

தினேஷ்
தினேஷ்

பிக் பாஸில் வைல்ட் கார்ட்டில் என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கும் தினேஷூக்கு ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். ‘ராஜா ராணி’ அர்ச்சனா, கானா பாலா, ஆர்.ஜே. பிராவோ, அன்னலட்சுமி, தினேஷ் ஆகியோர்தான் இந்த வைல்ட் கார்டு போட்டியாளர்கள்.

வினுஷா, யுகேந்திரன் வெளியேற்றத்திற்குப் பிறகு இவர்களது என்ட்ரியால் பிக் பாஸ் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முதல் நாளே அர்ச்சனா அழுகையை ஆரம்பிக்க, வைல்ட் கார்டு போட்டியாளர்கள் சுமால் பாஸ் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள்.

 தினேஷ்
தினேஷ்

இந்த நிலையில், வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கும் நடிகர் தினேஷின் சம்பளம் குறித்தான விவரம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், ஒரு எபிசோடுக்கு உத்தேசமாக 18,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள்ளே அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்களில் தினேஷூம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in