
பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர் கொடுத்த காதல் கன்டென்டால் ரசிகர்கள் கடுப்பாகி இருப்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் காதல் விவகாரம்தான் பேசு பொருளாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்காக போட்டியாளர்கள் காதல் விவகாரத்தைக் கொடுப்பது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வாடிக்கையாகியுள்ளது.
அந்த வகையில், இந்த சீசனில் ஒரு ஜோடி அல்ல இரண்டு காதல் ஜோடிகள் பிக் பாஸ் இல்லத்திலும் பார்வையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. அதிலும் குறிப்பாக நிக்சன் ஐஷூவிடம் செய்யும் சேட்டைகளால் இந்த சீசனின் அசல் கோளாறு இவர் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஐஷூவும் தனக்கு வெளியில் ஒரு பாய் ஃபிரெண்ட் இருப்பதாக சொல்லிக் கொண்டே நிக்சனிடம் நெருக்கம் காட்டி வருவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வெளியில் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் நாமினேஷனில் வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக் பாஸ் போட்டியாளர்கள் அவர்கள் ஐந்து பேரையும் தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியதோடு, நாமினேட்டும் செய்தனர். அவர்கள் பதிலுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, ஐஷூ, அக்ஷயா, மணி ஆகியோரை நாமினேட் செய்தனர்.
இந்த நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. அதன்படி காதல் கன்டென்ட்டால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வரும் ஐஷூ தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக அக்ஷயா உள்ளார். இவர்களோடு கானா பாலா மற்றும் அன்ன பாரதி ஆகியோருக்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இவர்கள் நால்வருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.