பிக் பாஸ்7: இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா?

'பிக் பாஸ்’ வீட்டில்
'பிக் பாஸ்’ வீட்டில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கும் நபர் குறித்தான விவரம் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் இல்லத்திற்குள் இந்த வாரம் இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் யார் வெளியே செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் வாரத்தில் அனன்யாவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பவா செல்லதுரையும் வெளியேறினார்கள். இதனால் கடந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லை என பிக் பாஸ் அறிவித்தார். இந்த வாரத்தில் நிக்சன், அக்‌ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, வினுஷா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

வினுஷா தேவி
வினுஷா தேவி

அந்த வகையில் மக்களை குறைவாக கவர்ந்த போட்டியாளராக வினுஷா இந்த வாரம் வெளியேற உள்ளார். பிக் பாஸ் சீசன் வந்ததிலிருந்து வினுஷா பெரிதாக சண்டை சச்சரவு எதுவும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார். இதனால் பிக் பாஸில் குறைந்தளவு ஆர்வம் காட்டும் போட்டியாளர் என பிக் பாஸே அவரைத் தேர்ந்தெடுத்து ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டார். இந்த நிலையில், அவர் நாமினேஷனும் செய்யப்பட்டுள்ளார். மக்கள் அவரைக் குறைந்த வாக்குகள் கொடுத்து வெளியேற்றுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in