பிக்பாஸ் 7 ... மக்களுக்கு பிடித்த பிரபலம் இவரா? வெளியான சர்வே முடிவுகள்!

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக்பாஸ் 7 போட்டியாளர்களில் மக்களுக்கு பிடித்த நபர் யார் என்பது குறித்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

 பிக் பாஸ்
பிக் பாஸ்

மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, விசித்ரா என 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த போட்டியை வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 20 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் வார எவிக்‌ஷனாக அனன்யா ராவ் வெளியேறினார். தொடர்ந்து உடல் நலக்குறைவால் தானாக முன்வந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை வெளியே வந்தார்.

இதனால் இரண்டாவது வாரத்தில் எவிக்‌ஷன் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மாயா,அக்‌ஷயா, வினுஷா, நிக்ஸன், விஜய், பிரதீப், விசித்ரா, சரவண விக்ரம், ஐஷூ, மணி சந்திரா மற்றும் பூர்ணிமா என 11 பேர் இடம் பெற்றனர். இதில் விஜய் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் பிக் பாஸ் இல்லத்தில் கடந்த வாரத்தில் மக்களை கவர்ந்த போட்டியாளர் குறித்து ஓர்மேக்ஸ் சர்வே வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை கூல் சுரேஷ் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவும், மூன்றாவது இடத்தை நிக்‌ஷனும் நான்காவது இடத்தை சரவணனும் பிடித்துள்ளனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் விசித்ரா 5 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in