பிக்பாஸ் அல்டிமேட்: வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார்?

பிக்பாஸ் அல்டிமேட்: வெளியேறப்போகும் அந்த 2 பேர் யார்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற இருக்கிறார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு நபர்கள் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியில் 24*7 என ஒளிபரப்பாகி கொண்டிருப்பதால் புகைப்பிடிக்கும் காட்சிகள் தமிழ் பிக்பாஸில் முதன் முறையாக ஒளிபரப்பானது, சண்டைகள், வாக்குவாதங்கள் என எடிட் செய்யாமல் வந்தது பிக்பாஸ் பார்வையாளர்களிடையே பரபரப்பை கூட்டியது. இது போன்ற நிகழ்வுகள் தமிழ் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு புதிது என்பதால் பிக்பாஸ் அல்டிமேட் பார்வையாளர்களிடையே சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நாமினேஷன், எலிமினேஷன் எதுவும் இருக்காது. ஆனால், பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் வாரமே நாமினேஷன் இருந்தது. அதில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற, கடந்த வாரம் சுஜா வருணி வெளியேறினார்.

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தாமரை, அபிநய், ஷாரிக், சிநேகன், நிரூப், ஜூலி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் உள்ளனர். குறைந்த வாக்குகள் பெற்று ஷாரிக், சிநேகன், அபிநய் ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் உள்ளனர். அதிலும் குறிப்பாக ஷாரிக் மிக குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். மேலும், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என பிக்பாஸே எச்சரித்துள்ள நிலையில் ஷாரிக்குடன் வெளியேற போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

சிநேகன் முதல் சீசனிலேயே வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது இடத்திற்கு வந்தார். மேலும் அவர் கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு நெருக்கமானவர் என்பதாலும் அவர் வெளியேற வாய்ப்புகள் குறைவு என்ற கருத்துகளை அதிகம் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இதனால் இந்த வாரம் பிக்பாஸ் எச்சரித்தபடி டபுள் எவிக்‌ஷன் இருந்தால் ஷாரிக்குடன் அபிநய் வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பொதுவாக நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில்தான் டபுள் எவிக்‌ஷன் இருக்கும். ஆனால், ஆரம்பித்த மூன்றாவது வாரத்திலேயே எவிக்‌ஷன் என்பது நிகழ்ச்சியின் பரபரப்பை கூட்டவும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கவும் என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தில்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in