பிக் பாஸ் அல்டிமேட்: இறுதிவாரம் ‘ஸ்பெஷல் கெஸ்ட்’ யார் தெரியுமா?

பிக் பாஸ் அல்டிமேட்: இறுதிவாரம் ‘ஸ்பெஷல் கெஸ்ட்’ யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவந்த நிலையில் அவர் அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் நடிகர் சிலம்பரசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜூலி, தாமரை, நிரூப், சுரேஷ் சக்ரவர்த்தி, சுருதி, அபிராமி, அனிதா, ஷாரிக் என முந்தைய ஐந்து சீஸன்களில் இருந்தும் 14 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். நேரலையாக 24x7 ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை தமிழ் பிக் பாஸ்ஸில் வராத பல காட்சிகள், போட்டி விதிமுறைகள் எனப் பலவும் மாறின. அதன்படி, புகைப்பிடிக்கும் காட்சிகள் ஒளிபரப்பானது, இரண்டுக்கும் மேற்பட்ட வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்தது போன்றவை நடந்தன.

அடுத்த வாரம் இறுதிக் கட்டத்தை நெருங்க இருக்கும் நிலையில், இந்த வார இறுதி அதாவது ஏப்ரல் 9 அன்று பிக்பாஸ் அல்டிமேட் இறுதி நிகழ்ச்சியின் ஒளிபரப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது. அந்த இறுதி எபிசோட்டுக்கான திட்டமிடல், சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை பேசப்பட்டு வருகின்றன.

வெகு சிறப்பான விருந்தினர்!

இறுதி எபிசோடில் சிறப்பு விருந்தினராக வந்து, வெற்றி பெறுபவருக்கு ‘பிக்பாஸ் அல்டிமேட்’ கோப்பையையும் பரிசுத்தொகையையும் வழங்கவிருப்பவர் யார் தெரியுமா? சாட்சாத் கமல்ஹாசனேதான்! இதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பரிசுத்தொகையாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இப்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் தாமரை, நிரூப், ஜூலி, பாலா, சுருதி, ரம்யா, அபிராமி ஆகிய ஏழு பேர் இறுதி கட்டத்துக்குப் போட்டியிடும் நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in