பிக்பாஸ் ஆறாவது சீசன்: போட்டியாளர்கள் யார், யார்?

பிக்பாஸ் ஆறாவது சீசன்: போட்டியாளர்கள் யார், யார்?
நடிகை சரண்யா

பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், அதன் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்கள் முடித்திருக்கின்றன. இதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடி வடிவமாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தமிழில் ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸ் ஓடிடியையும் தொகுத்து வழங்கினார். ஆனால் படப்பிடிப்பு காரணமாக அவர் பாதியில் விலக, அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கமாக ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும். அந்த வகையில் இந்த வருடமும் வழக்கம் போலவே ஜூலை மாத இறுதியில் அல்லத்ய் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி', பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சி முடியும்போது அடுத்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் தொடங்குவது வழக்கம்.

நடிகை ஜெனிஃபர்
நடிகை ஜெனிஃபர்

மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்தும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தேர்வு விஜய் டிவி பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், மற்ற தொலைக்காட்சி பிரபலங்கள், நாட்டுப்புற பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என கலவையாக இருக்கும். அந்த வகையிலும் இந்த சீசனிலும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஷ்ருதிகா, 'சார்பட்டா' சந்தோஷ் ஆகியோர் கலந்துகொள்ள அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மௌனராகம்' சீரியலின் கதாநாயகியான பிரவீனாவிடமும் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, நகைச்சுவை நடிகர் ரெடிங் கிங்ஸ்லே, முதல் சீசனில் இருந்தே கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை பூனம் பஜ்வா பெயர் இந்த சீசனிலும் அடிபடுகிறது.

நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே
நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே

இதுமட்டுமல்லாமல் வெங்கட்பிரபுவின் படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் நடிகர் சுப்பு பஞ்சு, செய்திவாசிப்பாளரும் நடிகையுமான சரண்யா, 'பாக்கியலட்சுமி' சீரியலில் முன்பு ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகையும் நடன இயக்குநருமான ஜெனிஃபர், சின்னத்திரை நடிகர் வினோத் பாபு உள்ளிட்ட பலரது பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் விஜய் டிவி நட்சத்திரங்கள்.

இவர்களில் யார் இறுதிப் பட்டியலில் வருவார்கள், இவர்கள் தவிர்த்து மற்ற தொலைக்காட்சி பிரபலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய மாடல்கள், நாட்டுப்புற கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் யார்? யார் என்ற பட்டியலை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது மட்டுமில்லாமல் ஆறாவது சீசனை தொகுத்து வழங்குவேன் என பிக்பாஸ் ஓடிடியில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இப்பொழுது கமல் வருவாரா அல்லது ஓடிடியைத் தொடர்ந்து சிம்புவே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவாரா என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்கத்தான் வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in