பிக் பாஸ்7 ரெட் கார்டு விவகாரம்.. கிண்டல் செய்த பிரதீப் குடும்பத்தினர்!

தனது குடும்பத்தினருடன் பிரதீப்
தனது குடும்பத்தினருடன் பிரதீப்

பிக் பாஸில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், அதனை கிண்டல் செய்யும் விதமாக தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபலமான போட்டியாளர்கள் இல்லையென்றாலும் போட்டி ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் ஆதிக்கம் செலுத்துபவராக திகழ்ந்து வந்தார். கிட்டத்தட்ட இறுதி போட்டியாளராக பிரதீப் நிச்சயமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

``நான் இப்படித்தான் இருப்பேன். இதற்காகத்தான் விளையாடுகிறேன்'' என்று ஓபனாக பேசிவிட்டே விளையாட செய்தார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த டாஸ்க் ஒன்றில் கூல் சுரேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவரிடம் கோபமாக பல வார்த்தைகளை பேசினார். அது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் அவரோ தான் இப்படித்தான் பேசுவேன் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

அதனையடுத்து கமல்ஹாசனிடம் ஜோவிகா, மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு உள்ளிட்டோர் உரிமை குரல் எழுப்பி பிரதீப் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். முக்கியமாக அவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; கெட்ட வார்த்தை பேசுகிறார் என குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

மேலும் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் எனவும் கூறினார்கள். தினேஷ், விசித்ரா மற்றும் அர்ச்சனா மட்டுமே பிரதீப் பிக் பாஸ் வீட்டில் தொடரட்டும் என்றனர். எனவே மெஜாரிட்டி போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்பதால் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப்பிற்கு கமல் பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதையடுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரெட் கார்டை முன் வைத்து தன் குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ளார் பிரதீப்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. அவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். ஒரு சிலரோ பிரதீப் மீது அபாண்டமாக பழிப்போட்டிருக்கிறார்கள். இந்த சீசனில் அவர் இருந்தால் கண்டிப்பாக வென்றுவிடுவார் என்பதால்தான் ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை டார்கெட் செய்து காலி செய்துவிட்டார்கள் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in