விஷ்ணுவை தகாத வார்த்தையில் திட்டிய தினேஷ்... தகிக்கும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் இல்லத்தில்...
பிக் பாஸ் இல்லத்தில்...

பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்து ஓய்ந்த நிலையில் தற்போது அடுத்த வார்த்தை வார் தொடங்கி இருக்கிறது. இந்த முறை நடிகர்கள் விஷ்ணு மற்றும் தினேஷூக்கு இடையில் சண்டை முற்றி இருக்கிறது.

பிக் பாஸ் இல்லத்தில் இருந்து கடந்த வாரம் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் ஐஷு வெளியேற்றப்பட்டார். அதற்கு முந்திய வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிய விவகாரம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கடும் வாக்குவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், கடந்த வாரம் இதற்கெல்லாம் தீர்வு கொடுக்கும் விதமாக கமல்ஹாசன் இந்தப் பஞ்சாயத்தை முடித்து வைத்தார். இதனை அடுத்து தீபாவளி சிறப்பு எபிசோடு, வழக்கமான மற்ற டாஸ்க் என கடந்த இரண்டு நாட்கள் மந்தமாகவே சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் வீடு.

இதை உணர்ந்த பிக் பாஸ் தற்போது இந்த வார கேப்டனான தினேஷூக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் கொளுத்தி போட்டுள்ளார். அதன்படி, பிக் பாஸ் தினேஷிடம் சீக்ரெட் டாஸ்க் ஒன்றைக் கொடுக்கிறார். பிக் பாஸ் பேச்சைக் கேட்டுக் கொண்டு தினேஷ் விஷ்ணுவிடம் வம்படியாக சண்டைக்குச் செல்கிறார்.

காலையிலேயே இருவரும் நரி- அமுல் பேபி என சண்டைப் போட்டுக்கொள்ளும்படியான புரோமோ ஒன்று வெளியானது. இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் தினேஷ் விஷ்ணுவை புரோமோ பொறுக்கி எனத் தகாத வார்த்தையில் திட்டுகிறார். மேலும், இந்த வாரம் ஒருவரைப் போல மற்றவர்கள் உடை அணிந்து கொண்டு இமிட்டேட் செய்ய வேண்டும் என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in