பிக்பாஸ் ஜூலி - ஷாரிக் கான் டேட்டிங்?

பிக்பாஸ் ஜூலி - ஷாரிக் கான் டேட்டிங்?

பிக்பாஸ் ஜூலி மற்றும் ஷாரிக் கான் இருவரும் டேட்டிங் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் ஜூலி. இந்தப் பிரபல்யம் மூலம் இவர் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் கலந்து கொண்டார். ஆனால், ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த பிரபல்யம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்மறையாக அமைந்தது. இதன் பிறகு ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வெர்ஷனான, ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இதில் நடிகை உமா ரியாஸ்கானின் மகனான ஷாரிக் கானும் கலந்து கொண்டார்.

இதில் இருவருக்கும் நட்பு உண்டானது. இந்த நட்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பும் தொடர்கிறது என்பதை ஜூலி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ஜூலி தெரிவித்திருப்பதாவது, ‘A Sweet Friendship, Refreshes the Soul’ என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே, இருவரும் டேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தப் புகைப்படங்களை ஜூலி பகிர்ந்திருப்பது இந்தத் தகவலை உறுதி செய்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in