பிக் பாஸ் வீட்டில் காதல்… வைரலாகும் முத்தக் காட்சி!

நிக்சன், ஐஷு
நிக்சன், ஐஷு

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், வீட்டிற்குள் ஒரு காதல் ஜோடி முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 கடந்த 1ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. மற்ற சீசன்களை தொகுத்து வழங்கியது போல இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா என 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இந்த சீசனின் முதல் வாரத்தில் அனன்யா எலிமினேட் ஆகி வெளியேறினார். இதையடுத்து பவா செல்லதுரை, என்னால் இந்த சூழ்நிலையில் இருக்க முடியாது என்று கூறி தானாகவே வெளியேறினார். அதை தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்பட்டார்.

18 போட்டியாளர்கள் கொண்ட பிக் பாஸ் வீட்டில் 3 போட்டியாளர்கள் வெளியேறி நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். தற்போது வைல்டு கார்டு எண்ட்ரி 5 பேர் அனுப்பட உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக இந்த முறை 5 போட்டியாளர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளனர். இதனால், ஆட்டம் சுடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிக்சன், ஐஷு
நிக்சன், ஐஷு

இப்படியான பஞ்சாயத்து ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க இந்த பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் எபிசோட் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐஷு மற்றும் நிக்ஸ்ன் ஆகியோர் இந்த சீசனில் நெருக்கமாக இருக்கின்றனர். அவர்களுக்கு இடையே ஒரு சின்ன ரொமேன்ஸ் ஒன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறி நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது முத்தம் கொடுத்துக் கொண்டனர். நடுவில் ஒரு கண்ணாடி இருந்ததால், லிப் லாக் சீன் மிஸ்மிங் என்று நெட்டிசன்ஸ் இணையத்தில் இந்த வீடியோவை தீயாக பரவவிட்டு புலம்பி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in