
பிக்பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசன் மீண்டும் வர இருக்கிறது. யார், யார் ஜோடிகள், யார் தொகுப்பாளர், நடுவர்கள் என்பதை கட்டுரையில் பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்களை கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி நடன நிகழ்ச்சியின் முதல் சீசனை விஜய் டிவி ஒளிபரப்பியது. இப்பொழுது அதன் இரண்டாவது சீசன் இந்த வாரம் ஞாயிறு அதாவது 8-ம் தேதி இரவு 7.30 மணி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஃபோக் பாடல்கள், வெஸ்டர்ன் பாடல்கள் என தமிழ் சினிமாவின் ஹிட் பாடல்களுக்கு ஜோடிகள் நடனமாட இருக்கிறார்கள்.
கடந்த சீசனில் அனிதா, ஷாரிக், ரேகா, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த சீசனில் ரியல் ஜோடிகளாக தாமரை, அவரது கணவர் பார்த்தசாரதி, சுஜா வருணி, அவரது கணவர் சிவக்குமார், ரீல் ஜோடிகளாக ஐக்கி பெர்ரி- தேவ் மஜோர், இசைவாணி- வேல்முருகன், அமீர்- பாவ்னி, கணேஷ்- ஹாரத்தி, அபிஷேக்- சுருதி ஆகியோர் ஜோடிகளாக கலந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியை பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் வெற்றியாளரான ராஜூ மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் இருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கின்றது.