பிக் பாஸ் 7: வீட்டிற்குள் போவதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன் வெளியிட்ட வீடியோ... இனி அவருக்கு பதில் சீரியலில் யார்?

சரவண விக்ரம்
சரவண விக்ரம்
Updated on
1 min read

பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சரவணன் போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கிறார். மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனும் தீபிகாவும் அவரை வழியனுப்பி வைத்தார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவடையப் போகிறது என சொல்லப்படும் நிலையில் இனி வரும் எபிசோட்களில் கண்ணன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு முன்பு எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "நான் இப்போதுதான் அவசர அவசரமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க போக போறேன். அதற்கு முன்பு உங்களிடம் பேசிவிடலாம் என்று நினைத்தேன்.

இன்னும் மூன்று மாதங்கள் நான் ஃபோன் எதுவும் யூஸ் பண்ண முடியாது. உங்களிடம் பேசவும் முடியாது. ஆனால் கண்டிப்பாக நான் மூன்று மாதங்கள் அங்கு இருந்து வெற்றியோடு கப் ஜெயித்து விட்டு தான் வருவேன். அதற்கு நீங்கள் தான் எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படி கண்ணனுக்கு சப்போர்ட் கொடுப்பீங்களோ அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணனுக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நான் உள்ளே இருக்கும் போது நீங்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு எல்லாம் வெளியே வரும்போது நிச்சயம் பதில் தருவேன். இது நான் ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்திருந்தது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே எனக்கு இதுவும் பெரிய வாய்ப்பு" என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

சரவண விக்ரம்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
சரவண விக்ரம்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
சரவண விக்ரம்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
சரவண விக்ரம்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
சரவண விக்ரம்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in