பிக் பாஸ்7: கட்டப்பை முதல் கருப்பு வைரம் வரை... போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த சுவாரஸ்ய பரிசுகள் என்னென்ன?

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் 7 நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் முதல் நாளான நேற்று போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடந்தது. மேலும் முதல் வாரத்தின் கேப்டனாக விஜய் உள்ளார். உள்ளே செல்லும் போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் ஒவ்வொரு சுவாரஸ்ய பரிசை கொடுத்து அனுப்பினார். முந்தைய சீசன்களில் செடி, இயற்கை பொருட்கள் உள்ளிட்டவற்றை போட்டியாளர்களுக்கு கொடுத்து அனுப்பினார். ஆனால், இந்த சீசனில் போட்டியாளர்களுடன் தொடர்புபடுத்தி பொருட்களை கொடுத்து அனுப்பினார். அவை என்னென்ன என்பது குறித்து எதிர்பார்க்கலாம்.

பிக்பாஸ் 7வது சீசனில் முதல் ஆளாக வீட்டுக்குள் நுழைந்தவர் கூல் சுரேஷ்தான். இவருக்கு 'சுரேஷ்' என்ற பெயர் போட்ட செயின் கொடுத்து அனுப்பினார். அடுத்து வந்த யூடியூபரான பூர்ணிமா ரவிக்கு கமல்ஹாசன் விசிலை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.

'குக் வித் கோமாளி' புகழ் ரவீனாவின் துறுதுறுப்புக்கு ஏற்றவாறு பட்டர்பிளை ரிங் ஒன்றை கமல் பரிசாக கொடுத்து அனுப்பினார். நடிகர் பிரதீப் ஆண்டனிக்கு ஜாய் ஸ்டிக்கை பரிசாக கொடுத்தார் கமல். சுயாதீன இசை கலைஞர் நிக்சனுக்கு கண்ணாடியை கொடுத்தார் கமல். அடுத்து வந்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் புகழ் வினுஷா தேவிக்கு கருப்பு வைரத்தை பரிசாக கொடுத்தார். நடனக் கலைஞரான மணிக்கு குருநாதா எனும் வாசகம் அடங்கிய டீசர்ட்டை கமல் பரிசாக கொடுத்தார். அக் ஷயாவுக்கு கற்றாழை செடியை பரிசாக வழங்கினார். வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுக்கு அவருடைய தாய் வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் பரிசாகக் கொடுக்கப்பட்டது.

டான்சர் ஐஷுவுக்கு A என்கிற எழுத்துடன் கூடிய ஜாக்கெட்டை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார். திரைப்பட நடிகையும் மேடை நாடக கலைஞருமான மாயா கிருஷ்ணனுக்கு ஜோக்கர்கள் மூக்கில் அணியும் சிகப்பு நிற பந்தை பரிசாக வழங்கினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சரவண விக்ரம் கட்டப்பையை பரிசாக வழங்கியுள்ளார். பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கு அவரது தந்தை பயன்படுத்தி கண்ணாடியையே பரிசாக வழங்கினார். சீரியல் நடிகர் விஷ்ணுவுக்கு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக வழங்கினார். எழுத்தாளர் பாவா செல்லத்துரைக்கு நோட்டு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in