ரசிகர்களை சந்திக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குழு!

ரசிகர்களை சந்திக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குழு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குழு ரசிகர்களை சந்திக்க உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் ஒன்று. குடும்ப தலைவியின் கதை என ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் பாக்யா குடும்ப தலைவி. பிள்ளைகளை பொறுப்பாக வளர்த்து குடும்பத்தை கவனித்து கொண்டு தனக்கான சுயமரியாதையை தேடும் குடும்ப தலைவி. அப்பாவியான பாக்யாவை அவரது கணவர் கோபியும் மூத்த மகன் செழியனும் மதிப்பதில்லை. இந்த நிலையில், கோபி தனது பழைய தோழியுடன் நட்பை புதுப்பித்து அந்த உறவை திருமணம் வரை எடுத்து செல்கிறார். பாக்யாவும் விவரம் அறியாமல் நீதிமன்றம் வரை சென்று கோபியுடன் விவாகரத்துக்கு சம்மதிக்கிறார்.

இதற்கு பிறகு கதை எப்படி நகர்கிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் குழு இந்த சீரியலின் ரசிகர்களை மதுரை மற்றும் கோவையில் சந்தித்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் இன்று மாலை 6 மணிக்கு கோவையில் செல்வபுரத்தில் உள்ள ஷிவாலாயா மஹாலிலும் மதுரையில் வருகின்ற 18ம் தேதியும் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

’மகளிர் மட்டும்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் விஜய் டிவியின் நட்சத்திரங்களான நிஷா, சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் மற்றும் பல விஜய் டிவியின் நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து எழில் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் விஜே விஷால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து செழியன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் விலகினார். இவருக்கு பதிலாக விகாஸ் என்பவர் நடித்து வருகிறார். சின்னத்திரை பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த சீரியலின் முக்கிய கதாப்பாத்திரங்கள் மகளிர் தினத்திற்காக ரசிகர்களை மதுரை மற்றும் கோவையில் சந்திந்து அவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பது இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.