`பாக்கியலட்சுமி’ சீரியல்: ஆர்யனுக்கு பதில் இனி இவர்தான்

`பாக்கியலட்சுமி’ சீரியல்: ஆர்யனுக்கு பதில் இனி இவர்தான்
ஆர்யன்

’பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகர் ஆர்யனுக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ’பாக்கியலட்சுமி’ சீரியலும் ஒன்று. குடும்ப தலைவியின் கதையை அடிப்படையாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த சீரியலில் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் ஆர்யன் நடித்து வருகிறார்.

குடும்பத்தில் மூத்த மகனாக, தன் நலம் மட்டுமே யோசிக்க கூடிய கதாப்பாத்திரம் செழியனுடையது. இதில் நடிக்கும் ஆர்யனுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், அவர் திடீரென சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாயின. சீரியலில் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு குறைவான முக்கியத்துவம் மற்றும் காட்சிகள் இருப்பதால் அவர் சீரியலை விட்டு விலகுவதாகவும் இன்னொரு பக்கம் அவருக்கு வேறு புது சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாலும் விலகுவதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த காரணங்கள் குறித்து சீரியல் தரப்போ அல்லது ஆர்யன் தரப்போ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

விகாஸ்
விகாஸ்

இந்நிலையில், ஆர்யன் விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில் அவருக்கு பதிலாக செழியன் கதாப்பாத்திரத்தில் விகாஸ் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜபார்வை’, ‘முள்ளும் மலரும்’, ‘பொண்ணுக்கு தங்க மனசு’ உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இவர் நடிக்கிறார் என்பதும் இவருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதையும் சமீபத்தில் விகாஸ் தனது பேட்டி மூலம் உறுதி செய்திருக்கிறார்.

விகாஸ் இனி செழியனாக வரும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. செழியன் கதாப்பாத்திரத்தில் விகாஸ் எந்த அளவு பொருந்தி போகிறார், இவருக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பார்வையாளர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்க போகிறது என்பதை எல்லாம் பொருத்திருந்து பார்க்கலாம்.

Related Stories

No stories found.