'கனா காணும் காலங்கள்' சீரியலுக்குள் வரும் ஆர்யன்?

'கனா காணும் காலங்கள்' சீரியலுக்குள் வரும் ஆர்யன்?

'பாக்கியலட்சுமி' புகழ் ஆர்யன் 'கனா காணும் காலங்கள்' சீரியலுக்குள் வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 'பாக்கியலட்சுமி'யும் ஒன்றும். சீரியல் தொடங்கிய ஆரம்ப காலத்தில் மாலை நேரம் ஒளிபரப்பானது. ஆனால், சீரியலுக்கு கிடைத்த வரவேற்பைப் அடுத்து தொலைக்காட்சியின் ப்ரைம் நேரமான இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

குடும்பத் தலைவி, அவளுக்கான வேலை, வீட்டில் அவளுக்கான மரியாதை என ஒன்லைனை கொண்ட இந்த சீரியலில் அனைத்து கதாப்பாத்திரங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சீரியல் கதாநாயகியான பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியன். இந்த கதாப்பாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனுக்கு இந்த சீரியல் நல்ல புகழ் வெளிச்சம் கொடுத்தது. தன் நலம் மட்டுமே யோசித்து சிடுசிடுவென இருக்கக்கூடியவன் செழியன். இந்த கதாப்பாத்திரத்தில் தனக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக விகாஸ் என்பவர் இப்போது நடித்து வருகிறார்.

ஆர்யன் இந்த சீரியல் விட்டு விலகியதும் இவரும் இவரது மனைவியும் நடிகையுமான ஷபானாவும் இணைந்து ஜோடியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சீரியல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், இது குறித்து தொலைக்காட்சி தரப்போ இரண்டு பேருமோ இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில்தான் இப்போது ஆர்யன், விஜய் டிவியின் ஓடிடி தளமான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'கனா காணும் காலங்கள்' மூன்றாவது சீசனில் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே, இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்து புகழ்பெற்ற இர்ஃபான் இப்போது இதில் ஆசிரியராக என்ட்ரி கொடுத்திருக்க ஆர்யனும் உள்ளே வர இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யனுடைய கதாப்பாத்திரம் என்ன, அவருடைய என்ட்ரி எப்போது என்பது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in